திமுக ஆட்சி என்​பது நீதிக்​கட்​சி​யின் தொடர்ச்​சி​தான்: முதல்​வர் ஸ்​டா​லின் பெரு​மிதம்

4 weeks ago 4

சென்னை: திமுக​வின் ஆட்சி என்​பது நீதிக்​கட்​சி​யின் தொடர்ச்​சி​யான ஆட்​சி​தான் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதத்​துடன் கூறி​னார். தி​ரா​விட அறநெறி​யாளர் தமிழ்​வேள் பி.டி.​ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளி​யீட்டு விழா, சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நூலை வெளி​யிட்டு பேசி​ய​தாவது:‘வாழ்வே வரலாறு’ என்ற நூலை நீதிக்​கட்​சி​யின் வழித்​தடத்​தில் உரு​வான திமுக தலை​வ​ராக இருந்து வெளி​யிடு​வதை என் வாழ்​நாளில் கிடைத்த பெரு​மை​யாக கருதுகிறேன்.

1936-ல் ஒருங்​கிணைந்த சென்னை மாகாணத்​தின் முதல்​வ​ராக இருந்த பி.டி.​ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழகத்​தின் முதல்​வர் என்ற தகு​தி​யோடு, அந்த பெரு​மையோடு வெளி​யிடு​கிறேன். ‘பி.டி.​ராஜனின் அரிய ஆலோ​சனை​களை நிறைவேற்றி வைக்​கும் செயல் வடிவ​மாகத்​தான் திமுக ஆட்சி திகழ்​கிறது’ என்று மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி சொன்​னார். அந்த வழித்​தடத்​தில்​தான் நாமும் இன்​றைக்கு பயணித்​துக் கொண்​டிருக்​கிறோம். நான் அழுத்​தந்​திருத்​த​மாக சொல்​கிறேன். திமுக​வின் ஆட்சி என்​பது நீதிக்​கட்​சி​யின் தொடர்ச்​சி​யான ஆட்​சி​தான்.

Read Entire Article