சென்னை: “அமலாக்கத் துறை டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
இது குறித்து விஜய் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும், திமுக அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 6-ஆம் தேதி (06.03.2025) அன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.