தினமும் மாலையில் அரியலூரில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்: ரூ.12.96 கோடியில் அரசு நல உதவி

4 days ago 3

அரியலூர் மே 15: அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தனர். அப்போது, 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் பொதுமக்களிடமிருந்து 1097 மனுக்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:
ஓரு அரசு மக்கள் நம்மை நாடி வந்து மனு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அரசே மக்களை நாடிச் சென்று சேவை புரியும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் மனு நீதி நாள் முகாம் தொடங்கபட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அதனை விரிவுப்படுத்தி அனைத்து அரசுத் துறைகளும் மக்களை நேரடியாக சந்தித்து மக்களுக்கான சேவைகளை வழங்கிட வேண்டும் என அறிவித்ததன் அடிப்படையில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுடைய எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்கின்ற அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை நடைமுறைப்படுத்தி அது மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கும் இம்முகாமில் மனுக்களை வாங்கி அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதிலும் இதற்காக காத்திருக்கின்ற மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இந்த முகாம் மிகச்சிறப்பான வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என கூறினார்

அதனை தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெறுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய் துறையின் வட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக மூலம் வழங்கப்படும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்பான மனுக்களை பெற்று அந்த மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படவுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான மானிய உதவித்தொகைகள், அயல்நாட்டில் கல்வி பயில்வதற்கான உதவித்தொகைள், தாட்கோ நிறுவனத்தின் வாயிலாக பல்வேறு மானிய உதவித்தொகைகள், படித்த இளைஞர்களுக்கு அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி வரையில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம். மேலும் நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்கள் நிலம் வாங்குவதற்கு ரூ.5 இலட்சம் நிதியுதவி தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. வேளாண்மைத் துறையின் சார்பில் டிராக்டர், பவர் டில்லா;கள், சொட்டு நீர் பாசனத்திற்கான உபகரணங்கள், விதைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது அத்திட்டங்களுக்கும் மனு அளித்து பயன்பெறலாம். கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப்படும் விவசாய கடனுதவிகள் மற்றும் கறவை மாடுகள் வாங்குவதற்கான கடனுதவிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

தொழிலாளர் நலன் துறை சார்பில் கல்வி உதவித்தொகைள், ஓய்வூதியங்கள், திருமண உதவித்தொகைககள் வழங்கப்படுவதுடன், தொழிலாளர்களுக்கான விபத்து உதவித்தொகை தற்போது ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.8 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தொகையானது 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தராஜ், ஷீஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படியுங்கள் அமைச்சர்கள் சி.வி.கணேசன், சா.சி.சிவசங்கர் வழங்கினர்

The post தினமும் மாலையில் அரியலூரில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்: ரூ.12.96 கோடியில் அரசு நல உதவி appeared first on Dinakaran.

Read Entire Article