கோடை விடுமுறை பல குழந்தைகளுக்கு விட்டாச்சு. என்னதான் கோடைகால சிறப்பு வகுப்புகள் , கார்டூன் சேனல்கள், உறவினர்கள் வருகை, அல்லது பயணம் என இருப்பினும் மொபைல் கேம்களில் இருந்து முற்றிலுமாக அவர்களை திசை திருப்ப இயலவில்லையா. சரி பாதுகாப்பான அவர்கள் வயதுக்கு ஏற்ப கேம்களை குறிப்பிட்ட கால நேரத்தில் கொடுக்க நினைக்கும் பெற்றோர்கள் கூகுள் பிளே ஸ்டோர் செயலியின் சில்ட்ரன் (Google Play Store – Children) வசதியை பயன்படுத்தலாம். உங்கள் குழந்தை எந்த வயதோ அதற்கேற்ப கேம்களை பட்டியலிட்டுக் கொடுக்கிறது. மேலும் பாதுகாப்பான கேம் செயலிகளை மட்டுமே உங்களுக்கு இந்த சில்ட்ரன் மெனு காட்டும். அதில் வயதைக் குறிப்பிட்டால் அதற்குரிய கேம்களை நீங்கள் தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The post சில்ட்ரன்! appeared first on Dinakaran.