திண்டுக்கல், ஜன. 17: திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தில் மக்கள் மன்ற சுற்றுச்சுவர் திறப்புமற்றும் மத நல்லிணக்க விழா நடந்தது. ஆயர்கள் தாமஸ் பால்சாமி, சகாயராஜ், திருவருட் பேரவை கவுரவ தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். பேராளர்கள் அந்தோணி பாப்புசாமி, ஜூட் ஜெரால்ட் பால்ராஜ் தலைமை தலைமை வகித்து சுற்றுச்சுவரை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவருட் பேரவை பொருளாளர் நாட்டாண்மை காஜா மைதீன் மத நல்லிணக்கம் குறித்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவருட் பேரவை செயற்குழு உறுப்பினர் பெஞ்சமின் ஆரோக்கியம், பங்கு பணியாளர் சவுந்தரராஜன், ஆசிரியர் மரிய ராஜேந்திரன், ஜான் பீட்டர், ஊர் நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, ஜெயபிரகாஷ், அலெக்சாண்டர், ராபர்ட் எட்வின், அகஸ்டின் ரூபன், சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல்லில் மத நல்லிணக்க விழா appeared first on Dinakaran.