திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞர் கைது

3 months ago 15

திண்டுக்கல்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அரசு போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்ததன் பேரின் நேற்று தூத்துக்குடியில் இருந்து ஈரோடு செல்லும் ஓகா விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்துள்ளார்.

ரயில் விருதுநகர் வந்தபோது அருப்புக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பெண் ஏறிய அதே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறியுள்ளார். மேலும் மதுபோதையில் இருந்த சதீஷ்குமார், ஈரோடு நோக்கி சென்ற பெண்ணின் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு சதீஷ்குமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் பாலியல் தொல்லை குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்த போலீசார், ஓகா விரைவு ரயில் திண்டுக்கல் வந்தபோது பாலியல் தொல்லை அளித்த சதீஷ்குமாரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசரணைக்கு பின்னர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா என்பது குறித்து தெரியவரும்.

The post திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article