3வது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: 5 ஆயிரம் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; மழைக்கு 5 பேர் பலி

3 hours ago 2


பெங்களூரு: பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை முதல் தினமும் இரவு நேரத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மழைநீர் வெளியேற இடமில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெங்களூரு ஹொரமாவு வார்டில் உள்ள சாய் லேஅவுட் மற்றும் வட்டரபாளையா ஆகிய பகுதியை சுற்றியுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

5 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மழைக்கு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் சசிகலா (31) என்ற பெண் இறந்தார். மின்சாரம் தாக்கி மன்மோகன் காமத் (63) மற்றும் தினேஷ் (12) ஆகியோர் உயிரிழந்தனர். இதன் மூலம் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

The post 3வது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: 5 ஆயிரம் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; மழைக்கு 5 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article