திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

4 months ago 34

விழுப்புரம்,

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி இரவில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. விளங்கப்பாடி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைகளில் தாறுமாறாக ஓடியது.

அப்போது சாலையோரம் நடந்துசென்றவர்கள் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மற்றும் சாலையில் நடந்து சென்ற ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் பயணம் செய்தவர்கள் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

Read Entire Article