தி.மு.க. அரசை கண்டித்து 3 இடங்களில் பொதுக்கூட்டம்- ராமதாஸ் அறிவிப்பு

4 months ago 26

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தி.மு.க. அரசின் அவலங்களையும், மக்கள் விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 3 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

* 17.10.2024 (வியாழக்கிழமை) மாலை- சிதம்பரம்/விருத்தாசலம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

* 20.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) மாலை-திண்டிவனம்.

* 26.10.2024 (சனிக்கிழமை) மாலை- சேலம் ஆகிய இடங்களில பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.பொதுக்கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகிறோம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Read Entire Article