தாழ்தள பேருந்துகளில் உள்ள பணி சிரமத்தை போக்க நடவடிக்கை: அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம்

2 hours ago 2

சென்னை: தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை பொதுச்செயலாளர் பி.கருணாகரன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ''மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், 12மீ நீளம் கொண்ட பேருந்தை பணிமனையில் இருந்து எடுத்து, விடுவதிலும், குறுகலான சாலைகளில் இயக்குவதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

Read Entire Article