தாம்பரம் வட்டத்தில் விஏஓ-க்கள் பற்றாக்குறை: மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வலியுறுத்தல்

14 hours ago 2

தாம்பரம் வட்டத்தில் மக்கள் தொகை மற்றும், சேவை அடிப்படையில் விஏஓ-க்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக வருவாய் துறை நிர்வாகத்தில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய, 3 வருவாய் கோட்டங்களும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செங்கல்பட்டு, செய்யூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 வட்டங்களும், 40 உள்வட்டங்களும், 636 வருவாய் கிராமங்களும் உள்ளன.

இதில் தாம்பரம், பல்லாவரம் வட்டங்களில் மக்கள் தொகை அதிகம். இந்த வட்டங்களில் ஏராளமான பெரிய கிராமங்கள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், ஒரு விஏஓ-வால் பொதுமக்களின் மனுக்களை கையாள சிரமப்பட வேண்டியுள்ளது. காலமாற்றத்துக்கு ஏற்ப, மக்கள் தொகை மற்றும், சேவை அடிப்படையில் விஏஓ-க்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Read Entire Article