தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- பயணிகள் பீதி

2 months ago 11

சென்னை,

கடந்த சில வாரங்களாக விமானங்கள், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் சோதனை செய்து பார்த்தால் மிரட்டல்கள் வெறும் புரளி என தெரியவருகிறது. பெரும்பாலான மிரட்டல்கள் விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமெயில் மூலமாக விடுக்கப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பதிலும் கடும் சவால் நீடிக்கிறது.

இந்த நிலையில், தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், தாம்பரம் நடைமேடை முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர். போலீசார் திடீரென சோதனை செய்து வருவதால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது. 

Read Entire Article