தாம்பரம் - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

3 days ago 4

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22624) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற டிசம்பர் 27-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22623) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 28-ந்தேதி வரையிலும் கூடுதலாக 3-வது வகுப்பு ஏ.சி. எக்கனாமிக் பெட்டி-3, படுக்கை வசதி பெட்டி-1 என மொத்தம் 4 பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article