
டெஹ்ரான்,
ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியது. 12 நாட்கள் நீடித்த இந்த போர் பதற்றம் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. முன்னதாக போர் பதற்றம் காரணமாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்பட இருந்த விமானங்கள் நிறுத்தப்பட்டு சர்வதேச போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் டெஹ்ரானில் இருந்து வெளிநாட்டு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. 20 நாட்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு டெஹ்ரானின் இமாம் கோமேனி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது.