சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

8 hours ago 3

அமராவதி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 65), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால், மனைவி மற்றும் குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

தனிமையில் இருந்த அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் 9 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி கொடுப்பதாகக் கூறி மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை சோமலா போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படு்த்தி வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கு விசாரணை சித்தூர் சிறப்பு போக்சோ கோர்ட்டில் 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் நீதிபதி எம்.சங்கரராவ் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். ராமகிருஷ்ணா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.  

Read Entire Article