
பூஞ்ச்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனி மெந்தர் பகுதியில் இன்று பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி, பஸ்சில் பயணித்தவர்களில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில், பஸ் முற்றிலும் சேதமடைந்தது. அதன் ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்தன. இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் உள்ளூர் மக்களும் இணைந்தனர்.
இதில், காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மெந்தர் துணைமாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி முகமது அஷ்பிக் கூறும்போது, பஸ் விபத்தில் சிக்கியுள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வந்தது.
2 பேர் விபத்தில் உயிரிழந்து விட்டனர். 35 பேர் காயங்களுடன் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என கூறினார்.