
நியூயார்க்,
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'மெட்காலா' என்ற பேஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான 'மெட் காலா' நிகழ்ச்சி நியூயார்க்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஹாலிவுட் திரை பிரபலங்கள் முதல் இந்திய நட்சத்திரங்கள் வரை பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் இந்திய நட்சத்திரங்களான நடிகர் ஷாருக்கான், கியாரா அத்வானி , தில்ஜித் தோசஞ், நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக்ஜோனாஸ் ஆகியோர் வித்தியாசமான உடை அணிந்து நிகழ்ச்சியில் கலக்கினர்.
அதில், வெள்ளை மற்றும் கறுப்பு நிற மாடர்ன் உடையில் பிரியங்கா சோப்ரா புன்னகை ததும்ப நடந்து வந்தார். இதே போன்று கர்ப்பமான நிலையிலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கியாரா அத்வானி மாடல் உடை அணிந்து அனைவரையும் கவர்ந்திழுத்தார். மேலும் நடிகர் ஷாருக்கான் கருப்பு நிற உடையில் புலி உருவம் பொறிக்கப்பட்டுள்ள கோலுடன் காணப்பட்டார்.