தா.பழூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைப்பு

1 week ago 3

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு சா.சி.சிவசங்கர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், கனிம அறக்கட்டளை நிதி திட்டம் 2024-2025-ன் கீழ்,ரூ 2 கோடி மதிப்பீட்டில்,12 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

மேலும், பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி, சிலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2024-2025-ன் கீழ், ரூ 70 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில், 3 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

உதயநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2024-2025-ன் கீழ்,ரூ 2 கோடியே 12 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில், 9 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.கோடங்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II-2022-2023-ன் கீழ்,ரூ 12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தார்.

காரைக்குறிச்சி ஊராட்சியில், நபார்டு ஊரக உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டம் 2024-2025-ன் கீழ் ,ரூ 96 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில், ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலை முதல் அருள்மொழி பொன்னாற்றங்கரை வரை தார்சாலை அமைக்கும் பணி, ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை (க&ப) செயற்பொறியாளர் திருவருள், மாவட்ட பள்ளி ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் கார்த்திக், வட்டார வளர்ச்சி குருநாதன் (வட்டார ஊராட்சி), பொய்யாமொழி (கிராம ஊராட்சி), ஒன்றிய பொறியாளர் சரோஜினி,பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோபிநாதன்(சிலால்), கண்மணி (பொ)(உதயநத்தம்), கலியபெருமாள் (காரைக்குறிச்சி), பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இராமதுரை, அவைத்தலைவர் சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் சாமிதுரை, இராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், கண்ணதாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சம்பந்தம், பாலசுப்ரமணியன், தங்கபிரகாசம், முனைவர் முருகானந்தம், நளராசன், எழிலரசி அர்ச்சுனன் மற்றும் அரசு அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post தா.பழூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article