தவெக மாநாடு எஸ்பி திடீர் ஆய்வு

3 months ago 16

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான பணிகளை மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் மாநாட்டு திடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விஜய் வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு, விஐபிகளின் பாதுகாப்பு, தொண்டர்கள் அமர எவ்வளவு நாற்காலிகள் போடப்பட உள்ளன, உணவு குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்தார். பின்னர், காவல்துறை சார்பில் கட்சி நிர்வாகியிடம் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எஸ்பி தீபக் சிவாச் கூறினார்.

The post தவெக மாநாடு எஸ்பி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article