அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நகர்புறத் திருக்கோயில்கள் திருப்பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம்

2 hours ago 1

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (05.02.2025) ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகரில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளின் முன்னேற்றம் குறித்த செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், 2024-2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகரில் அமைந்துள்ள 115 திருக்கோயில்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மரத்தேர், தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் உருவாக்கம், திருத்தேர் பராமரிப்பு பணிகள், நில மீட்பு மற்றும் நில அளவை பணிகளின் முன்னேற்றம், அறங்காவலர் குழு நியமனம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், திருக்கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்பிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகிய பொருண்மைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு திருப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் சு.ஜானகி, தி.சுப்பையா, இணை ஆணையர்கள் சி.லட்சுமணன், பொ.ஜெயராமன், கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, உதவி ஆணையர்கள் கே.சிவக்குமார், கி.பாரதிராஜா மற்றும் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நகர்புறத் திருக்கோயில்கள் திருப்பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article