தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

1 week ago 3

சென்னை,

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். தவெக கொடியில் வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம் பெற்று இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே,தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான பெரியார் அன்பன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான எங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, நடிகர் விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. தவெக சார்பில், விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அனைத்துதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு மீது ஜூலை 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதன்படி இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

Read Entire Article