தளி அருகே சோகம்: பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 வாலிபர் பரிதாப பலி

3 weeks ago 6

தேன்கனிக்கோட்டை: தளி அருகே பைக் பள்ளத்தில் கவிழ்ந்து 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி கிராமத்தில் வசிந்தவர்கள் முனிராஜ் மகன் வெங்கடேஷ் (32), லோகேஷ் மகன் திலிப் (19). இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்கள் நேற்றிரவு பைக்கில் செல்லோபுரம் ஏரி அருகே சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ், திலிப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரம் என்பதால் விபத்தை யாரும் பார்க்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை வரை இருவரும் வீட்டிற்கு வராததால், அவர்களது உறவினர்கள் தேடினர். அப்போது செல்லோபுரம் ஏரிக்கரையில் பைக் கவிழ்ந்து 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையறிந்த வெங்கடேஷ், திலிப் ஆகியோர் குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்து தளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தளி அருகே சோகம்: பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article