*மீட்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்
பாலக்காடு : மலப்புரம் மாவட்டம் வெற்றிலப்பாறை அருகே ஓடக்காயம் பகுதியில் 25 அடி ஆழக்கிணற்றில் கால்தவறி விழுந்த காட்டு யானை தவித்தது. மலப்புரம் மாவட்டம் வெற்றிலைப்பாறை அருகே ஓடக்காயம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை துவம்சம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி நடமாட முடியாமல் பரிதவித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானை, 25 அடி ஆழக்கிணற்றில் கால்தவறி விழுந்துள்ளது. இதனை கண்ட பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் டிஎப்ஓ அதிகாரி கார்த்திக்கிடம் தகவல் தெரித்தனர்.
இதனை தொடர்ந்து டிஎப்ஓ கார்த்திக் தலைமையில் வனத்துறை காவலர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுயானை பார்வையிட்டனர்.
அப்போது கிணற்றுக்குள் சிக்கிய காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி யானையை மீட்க வேண்டும். கிணற்றுக்கு அருகாமையில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி சாய்ப்பு அமைத்து கும்மி யானைகள் உதவியுடன் மீட்டு மருத்துவ பரிசோதனை முடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட முடிவெடுக்கப்படும் என ஆலோசனை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் இப்பகுதியைச் சேர்ந்த ஊர்மக்கள் காட்டுயானை அச்சுறுத்தலால் வெளியே நடமாட முடிவதில்லை. தோட்டப்பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தியுள்ளன. இதற்கு வனத்துறையினர் நிவாரணம் வழங்க வேண்டும்.
இப்பகுதியில் ஏக்கர் கணக்கில் விளைச்சல் நிலங்கள் காட்டுயானை மற்றும் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டு விவசாயினர் விவசாயத்தைவிட்டு விலகியுள்ளனர். எனவே வனவிலங்குளால் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டிஎப்ஓ.விடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கிணற்றில் விழுந்த காட்டுயானை மீட்டு செல்ல விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post மலப்புரம் அருகே 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை பரிதவிப்பு appeared first on Dinakaran.