தளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம் வைரல்

6 months ago 26

சென்னை,

நடிகர் விஜய் தனது 69-வது படமான 'தளபதி 69' ல் நடித்து வருகிறார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் 'தளபதி 69' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இந்தாண்டு தளபதி 69 படத்திற்கான கடைசி ஷாட் என பதிவிட்டுள்ளார். அதில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய்யின் கால்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடிக்கும் 2வது படம் இதுவாகும். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

Read Entire Article