'தளபதி 69' படத்தின் புதிய அப்டேட்!

3 months ago 33

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.

'தளபதி 69' படத்தை அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். இந்தநிலையில் இன்று மாலை 5 மணி முதல் வருகிற 3-ந் தேதி வரை இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Heard of 'Ulla Veliya' game? Let's see whether your guesses are on point..#Thalapathy69CastReveal from today 5 PM #Thalapathy @actorvijay sir #HVinoth @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 #Thalapathy69 pic.twitter.com/Sy50N6Vu05

— KVN Productions (@KvnProductions) October 1, 2024
Read Entire Article