தேவையான பொருட்கள்
அரை கிலோ மட்டன்
3 பெரிய வெங்காயம்
2 தக்காளி
3 பச்சை மிளகாய்
2 நட்சத்திர சோம்பு
பாதி எலுமிச்சை
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 பட்டை
4 கிராம்பு
3 ஏலக்காய்
1 டேபிள்ஸ்பூன் சீரகம்
1டேபிள் ஸ்பூன் சோம்பு
1 டேபிள்ஸ்பூன் வத்தல் தூள்
1 டேபிள் ஸ்பூன் மல்லி
பிரியாணி இலை
அரை கப் தயிர்
தேவைக்குநெய்
தேவைக்குஉப்பு
தேவைக்குஎண்ணெய்
தேவைக்குதண்ணீர்
செய்முறை:
முதலில் மசாலா தயார் செய்ய வேண்டும் அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நட்சத்திர சோம்பு,பட்டை,சீரகம், மல்லி, ஏலக்காய்,கிராம்பு,பிரியாணி இலை,வத்தல் தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.பிரியாணி செய்வதற்கான காய்களை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு குக்கரில் மட்டனை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதோடு உப்பு மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை 2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவேண்டும். பின்பு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும்.பின்பு 2 கப் சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதை வேக வைத்து வைத்திருக்கும் மட்டனை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு அதே குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை வதக்க வேண்டும்.பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் சிறிதளவு பச்சை மிளகாய் மல்லி இலை புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை குக்கரில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்பு பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் அதனோடு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.வேகவைத்து வைத்திருக்கும் மட்டனை அதனோடு சேர்க்க வேண்டும் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்க்க வேண்டும்.சிறிதளவு மல்லி இலையும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யும் சேர்த்து கலந்து விடவேண்டும். பின்பு குக்கரை மூடி மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை மூடி வைக்கவும்.சுவையான தலப்பாக்கட்டு பிரியாணி ரெடி.
The post தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி appeared first on Dinakaran.