தர்மபுரி அருகே தொடர் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் பெரியேரி: தூர்வார விவசாயிகள் கோரிக்கை

2 weeks ago 3

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்தும், நீர்வழித்தட ஆக்கிரமிப்பு, தூர்வாராதது போன்ற காரணங்களால், மோட்டுப்பட்டி பெரியேரி தண்ணீரின்றி வறண்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட 10 ஒன்றியங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தின் பிரதான நீராதாரமாக காவிரி ஆறு உள்ளது. தர்மபுரியின் ஆண்டு சராசரி மழையளவு 760 மி.மீ ஆகும். மாவட்டத்தில் 926 ஏரிகள், 5,301 கிணறுகள், 2,056 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ராமாக்காள் ஏரி, செட்டிக்கரை, ரெட்ரி, நார்த்தம்பட்டி, இலளிகம், பாப்பாரப்பட்டி, பைசுஅள்ளி, சோகத்தூர் உள்பட 73 ஏரிகள் உள்ளன.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 634 ஏரி, குளங்கள் உள்ளன. தர்மபுரி – திருப்பத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் அடுத்துள்ள பி.மோட்டுப்பட்டி பெரியேரி, சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வாராதது போன்றவற்றால், இந்த ஏரி தற்போது நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஏரியை நிலத்தடி நீராதாரமாக கொண்ட விவசாய கிணறுகள் வறண்டு கிடக்கிறது. மேலும், ஏரி முழுவதும் முட்செடிகள் முளைத்தும், புதர்கள் மண்டியும் குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே, நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணாபுரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தர்மபுரி அருகே தொடர் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் பெரியேரி: தூர்வார விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article