தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற ரஷிய விமானம் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

4 months ago 8

மாஸ்கோ,

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஏர்பஸ் A321 விமானம், மத்திய ரஷியாவில் உள்ள நோரில்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால், தரையிறங்கும்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. அந்த விமானத்தில் மொத்தம் 79 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதை அறிந்து பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர்.

இருப்பினும் விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read Entire Article