ஓமலூர், பிப்.25: ஓமலூர் அருகே, பாலிக்கடையே சேர்ந்தவர் அழகேசன் (35). இவர் கேபிள் கனெக்சன் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக்கவில்லை. இவருக்கும், இவரது அண்ணன் சித்தையனுக்கும் இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், தனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்குமாறு அழகேசன், சித்தையனிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சித்தையன், அருகில் கிடந்த மரக்கிளையால் அழகேசனை தாக்கி உள்ளார். வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதும், அண்ணனும், அவருடன் வந்தவரும் ஓடி விட்டனர். இதில் காயமடைந்த அழகேசன் ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சித்தையனை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை
தேடி வருகின்றனர்.
The post தம்பியை தாக்கிய அண்ணன் கைது appeared first on Dinakaran.