தமிழ்நாட்டில் முக்கிய துறைமுகங்கள் இணைப்பு குறித்து திமுக எம்பி கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

3 hours ago 2

ெசன்னை: இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நோக்கங்களுக்காக 170க்கும் மேற்பட்ட சர்வதேச துறைமுகங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, திமுக எம்.பி. இரா.கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. சர்வதேச துறைமுகங்களை பெரிய துறைமுகங்களுடன் இணைக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கடந்த 5 ஆண்டுகளில் நிறுவப்பட்ட முக்கியமான துறைமுக இணைப்புத்திட்டங்கள் குறித்தும், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு புதிய கடல் வழிச்சேவையை அரசாங்கம் தொடங்கியுள்ளதா என்ற விவரங்கள் குறித்தும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சரிடம், திமுக எம்பி இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அளித்துள்ள பதிலில், உலக பொருளாதாரத்தின் சுமூகமான செயல்பாடு, திறமையான சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தக போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக சர்வதேச துறைமுகங்களை நாட்டின் முக்கிய துறைமுகங்களுடன் இணைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நோக் கங்களுக்காக 170க்கும் மேற்பட்ட சர்வதேச துறைமுகங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் இடையேயான கடல் வழித்தடம் என்பது முக்கியமான சர்வதேச துறைமுக இணைப்புப் பாதையாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுடன் நமது நாட்டை இணைக்கும் சேவைகளை ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பிற கப்பல் வழித்தடங்கள் வழங்கி வருவதாகவும், தேவைகளுக்கு ஏற்ப கப்பல் வழித்தடங்களை மாற்றி அமைத்து, தங்கள் சேவைகளை செய்துவருவதாகவும் ஒன்றிய அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் முக்கிய துறைமுகங்கள் இணைப்பு குறித்து திமுக எம்பி கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article