தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்..!!

4 hours ago 2

 

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. மாணவர்கள் இரவு 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம். நாளை மாலை 5 மணிக்குள் இடம் ஒதுக்கீட்டு ஆணைக்கு மாணவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 9 முதல் 11 வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது.

The post தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article