தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

4 hours ago 2

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுதவிர, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்யத் தொடங்கியிருப்பதால், இனிவரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், கேரளாவில் வழக்கமாக மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்னதாக மே 24-ந்தேதியையொட்டி பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read Entire Article