தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

4 weeks ago 8

சென்னை,

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக ஈரோடு, கரூர், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 102.2 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாகவும் நாளை (வியாழக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும், இயல்பை விட சில இடங்களில் 3 டிகிரி வரை உயர்ந்து இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இம்மாத இறுதி வரையில் மேலும் வெப்பம் அதிகரித்தே இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில்பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

ஈரோடு- 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

கரூர்- 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

மதுரை- 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

தஞ்சாவூர்- 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

திருச்சி- 102.01 டிகிரி (38.9 செல்சியஸ்)

வேலூர்- 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

சேலம்- 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

திருத்தணி- 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)

Read Entire Article