
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக வேலூர், ஈரோடு, மதுரை ஆகிய 3 பகுதிகளில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கரூர் பரமத்தியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தஞ்சை, திருத்தணியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக வால்பாறையில் 82 டிகிரி பாரன்ஹீட், குன்னூரில் 76 டிகிரி பாரன்ஹீட், ஊட்டியில் 70 டிகிரி பாரன்ஹீட், கொடைக்கானலில் 69 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.