தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

5 hours ago 2

சென்னை

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வறண்ட காற்றின் ஊடுருவலால் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு இழந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நாளை (செவ்வாய்க்கிழமை) வந்தடைகிறது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25, 26-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழையும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் 25-ந்தேதி லேசான மழைக்கும், 26, 27-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Read Entire Article