
சண்டிகர்,
அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சேவா சடன் பகுதியில் செக்டர் 10 தெருவில் ஷமன், விஜய் குமார் காவலாளிகளாக பணியாற்றி வந்தனர்.
2 பேரும் நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தெருவில் விகாஸ் என்ற இளைஞர் நடத்து சென்றுள்ளார். அந்த இளைஞரை திருடன் என நினைத்த காவலாளிகள் 2 பேரும் இளைஞரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை அடித்துக்கொன்ற காவலாளிகள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.