தமிழ்நாட்டின் தொழில் நகரத்தில் குங்குமம் தோழியின் மாபெரும் ஷாப்பிங் திருவிழா

2 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

தமிழ்நாட்டின் ெதாழில் நகரம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு கோவை என்று சொல்லிவிடலாம். அங்கு மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் கொடிசியா வளாகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் ‘குங்குமம் தோழி’ இதழின் சார்பாக நடக்க இருக்கும் காதலர் தின ஷாப்பிங் திருவிழாவினை மெடிமிக்ஸ் நிறுவனம் மற்றும் கீதம் மேட்ரிமோனி இணைந்து வழங்குகிறார்கள். பன்னாட்டு வணிகக் கண்காட்சிகள் நடைபெறும் இந்த வளாகத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்கள், கிச்சன் ஐட்டம்ஸ் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இடம் பெற உள்ளது.

‘குங்குமம் தோழி’ மாதம் இருமுறை வெளியாகும் இதழ். இதில் பெண்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், தொழில், குழந்தை நலன், பக்தி என அனைத்து விதமான தகவல்கள் வெளியாகிறது. மேலும் தொழில்முனைவோர்களின் வெற்றிக் கதைகளும் கட்டுரையாக வெளியாகி வருகிறது. அப்படிப்பட்ட பெண்களில் பலர் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வருகிறார்கள். கண்காட்சியில் இடம் பெறுவதால், தொழில் மேலும் முன்னேற்றம் அடையும். மேலும் கண்காட்சியினை காண வரும் பெண்களுக்கும் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் துளிர் விடும்.

பெண்கள் பொதுவாகவே ஷாப்பிங் பிரியர்கள். பலர் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு மாறி இருந்தாலும், பொருட்களை நேரடியாக பார்த்து உணர்ந்து வாங்கும் போது ஒருவித மனத்திருப்தி கிடைக்கும். கண்காட்சியில் பல அரங்குகளில் பெண்களுக்கு தேவையான பல வித பொருட்கள் இடம் பெற இருப்பதால், கோவை மக்களை இந்தக் கண்காட்சியினை கண்டு மகிழ வாருங்கள் என்று ‘குங்குமம் தோழி’யின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம். வாருங்கள், கண்காட்சியினை கண்டு மகிழ்ந்து, விரும்பியபொருட்களை அள்ளிச் செல்லுங்கள்…

 

The post தமிழ்நாட்டின் தொழில் நகரத்தில் குங்குமம் தோழியின் மாபெரும் ஷாப்பிங் திருவிழா appeared first on Dinakaran.

Read Entire Article