தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் 13 பேர் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

2 hours ago 3

சென்னை: தமிழகம் முழுவதும் 13 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டிஎஸ்பியாக இருந்த நந்தகுமார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு டிஎஸ்பியாகவும், மதுரை நகர செல்லூர் உதவி கமிஷனராக இருந்த ரவிசந்திர பிரகாஷ் வேலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், திருவள்ளூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த அசோகன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த தங்கவேல் கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாகவும்,

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த மனிஷா கடலூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணை டிஎஸ்பியாகவும், திருச்சி நகர தில்லைநகர் உதவி கமிஷனராக இருந்த தங்கபாண்டியன் விழுப்புரம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த வி.எஸ்.ஜி.சுரேஷ் வேலூர் மாவட்டம் குடியாத்தம் டிஎஸ்பியாகவும், வேலூர் மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சரவணன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டிஎஸ்பியாக இருந்த ராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியகாவும், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த அறிவழகன் தென்காசி மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வுப்பிரிவு டிஎஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக இருந்த தேவராஜ் தேனி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த கென்னடி திருச்சி நகர கே.கே.நகர் உதவி கமிஷனராகவும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் 13 பேர் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article