திருச்சி, மே 7: திருச்சி ரங்கம் சட்டமன்ற அலுவலகத்தில் இ-சேவை மையத்திற்கான புதிய கட்டிடத்தை எம்எல்ஏ பழனியாண்டி நேற்று திறந்து வைத்தார்.திருச்சி ரங்கம் சட்டன்ற அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையத்திற்கான புதிய கட்டிடத்தை எம்எல்ஏ பழனியாண்டி நேற்று திறந்து வைத்து பெண் பயனாளி ஒருவருக்கு சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக அந்தநல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் மலர் அறிவரசன், திமுக நிர்வாகிகள் கைக்குடி சாமி, அதவத்தூர் கொடியரசு, ரங்கம் சந்தோஷ், பாகனூர் செங்காயன், குமார வயலூர் இன்ஜினியர் கார்த்திக் மற்றும் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன், திருச்சி லெட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ரங்கம் சட்டமன்ற அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.