திருச்சி, மே 7: திருச்சி மாவட்டம் ேக.சாத்தனுர், வடுகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கே.சாத்தனூரை சுற்று சுமார் 8 கிராமங்கள் உள்ளது. தங்களுடைய கிராமத்தின் நடுவில் திருச்சி பஞ்சப்பூர் – புதுக்கோட்டை அரைவட்ட தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வழியை தான் தாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த இடத்தில் தற்போது டாஸ்மாக் கடை அமைய உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் ஊர் பொதுமக்கள் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வர அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எங்களது கிராமத்தின் வழியாக புதிய பை பாஸ் சாலை செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் வழி ப்பறி சம்பவங்கள், பாலியல் சீண்டல்கள் என தொடர்ந்து பல குற்ற சம்பவங்கள் நடந்துவரும் நிலையில், டாஸ்மாக் கடை அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும், எனவே மாவட்ட கலெக்டர் மதுபானக்கடை அங்கு வருவதை தடுத்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.