1. மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்கு நுண்கடன் வழங்கிட ஏதுவாக 25 கோடி ரூபாய் மூலதனத்தில் “அலைகள்” திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும். மீனவ மகளிருக்கு பொருளாதார உதவிகள் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் மூலம் “அலைகள்” திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட, மீன் வியாபாரம். கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கு 25 கோடி மூலதனத்தில் 50,000 ரூபாய் மீனவ மகளிர் பயனடையும் வகையில் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண் கடன் வழங்கப்படும்.
2. காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவ கிராமங்கள்
32 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் தமிழ்நாட்டிலுள்ள கடலோர கிராமங்களில், காலநிலை மீனவ மாற்றத்தின் தாக்கத்தினை குறைக்கும் வகையில், மீனவ கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, பொருளாதார நிலையினை உயர்த்தி, காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவ கிராமங்கள் 32 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இக்கிராமங்களில் மீன் இறங்குதளம். வலைபின்னும் கூடம். சூரிய ஒளி மீன் உலர்த்தி. மீன் உலர்தளம், சாலைகள், கடற்பாசி வளர்ப்பு மற்றும் நண்டு வளர்ப்பு போன்ற மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
3. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்கள் 45 கோடி ரூபாய் செலவில் · பசுமை மீன்பிடி துறைமுகங்களாக” மேம்படுத்தப்படும் மீன்பிடி துறைமுகங்களில், ஈற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு கட்டுமானம், பசுமை கட்டடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு, மழைநீர் பாதுகாப்பு, திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்றவைகளை குறிக்கோளாகக் கொண்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் ரூ.13.00 கோடி, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் ரூ.14.50 கோடி மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.17.50 கோடி செலவில் “பசுமை மீன்பிடி துறைமுகங்களாக” மேம்படுத்தப்படும்.
இதன்மூலம் மீன்கள் ஏற்றுமதி அதிகரித்து அந்நிய செலாவணி அதிகரித்திட வழிவகை ஏற்படும்.
4. நாட்டின மீன் இனங்களை பெருக்கி பாதுகாத்திட 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் ஆறுகளில் இருப்பு செய்யப்படும் மீன்குஞ்சுகள். தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன்வளத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆறுகளில், நாட்டின மீனினங்களின் உற்பத்தியை அதிகரித்து, பாதுகாத்திட ஏதுவாக, ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 40 இலட்சம் இந்திய பெருங்கெண்டை சேல் கெண்டை மற்றும் கல்பாசு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஆறுகளில் இருப்பு செய்யப்படும்.
இதன் மூலம் நாட்டின மீன் வகைகள் பாதுகாக்கப்பட்டு உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகரிக்கப்படும். இதன் வாயிலாக, ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் மேம்படும். பொருளாதாரம்
5. தரமான மீன் மற்றும் மீன் உணவு பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கிட, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தினால் திட்டம் தொடங்கப்படும் “கயல்”.
மீன் மற்றும் மீன் உணவு பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கிட நேரடி கொள்முதல், தரம் மற்றும் பாதுகாப்புச் சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு மீன்வள தொடங்கப்படும். “கயல்” திட்டம்
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில். தேவைப்படும் இடங்களில் புதிய சில்லறை மீன் விற்பனை நிலையங்கள் உருவாக்கப்படும். இதன் வாயிலாக ஊட்டச்சத்து மிகுந்த மீன் உணவு, நுகர்வோருக்கு நியாயமான விலையில் சுகாதாரமாக வாய்ப்புகள் ஏற்படும். கிடைக்கவும். அதிகரிப்பதற்கும் வேலை வழிவகை ஏற்படும்.
6. பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடித்திறனை வகையில் 2,000 மேம்படுத்திடும் வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்கள் வாங்கிட 10 கோடியே 80 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
பாரம்பரிய நாட்டுப்படகு மீனார்களின் மூலதன மீன்பிடித் செலவினத்தை திறனை குறைத்து, அதிகரித்து, வருமானத்தை பெருக்கிட 2.000 பாரம்பரிய மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்கள் வாங்கிட 10 கோடியே 80 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
இதன் மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி தொழிலின் மூலதன செலவினம் குறைவதோடு வருவாய் அதிகரித்து, வாழ்க்கைத்தரம் மேம்படும்.
7, திருவள்ளூர் மாவட்டம், அவுரிவாக்கம் கீழ்குப்பம் மற்றும் வல்லம்பேடுகுப்பம் கிராமங்களில் புதிய மீன் இறங்குதளங்கள் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம். அவுரிவாக்கம் கீழ்குப்பம் மற்றும் வல்லம்பேடுகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை எளிதாக கடலுக்குள் செலுத்திடவும், பாதுகாப்பாக நிறுத்திடவும். சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கும் மற்றும் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை பெற்றிடவும் ஏதுவாக அணுகு கால்வாய், படகு நிறுத்தும் கால்வாய், வலைபின்னும் கூடம். மீன் உலர்தளம் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் மொத்தம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இதன் மூலம் சுமார் 2.700 மீனவ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்தோர் பயனடைவர்
8. செங்கல்பட்டு சதுரங்கப்பட்டினம் மீனவ கிராமத்தில் புதிய மீன் இறங்குதளம் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் மீனவ கிராமத்தில் மீன்பிடி தேவையான அடிப்படை தொழிலுக்கு வசதிகளை உருவாக்கும் விதமாகவும், சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கும், மீனவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்திடவும் மற்றும் மீன்களை விரைவில் சந்தைப்படுத்தவும் ஏதுவாக வலைப்பின்னும் கூடம், மீன் உலர்தளம் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இதன் மூலம் சுமார் 1.500 மீனவ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்தோர் பயனடைவர்.
9. செயற்கை முறை கருவூட்டல் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலகுகளில் உறைவிந்து சேமிப்பு மற்றும் விநியோகத்திற்குத் தளவாடப் பொருட்கள் கொள்முதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள்13. 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்
செயற்கைமுறை கருவூட்டல் சேவை இடுபொருட்கள் விநியோகத்தின் தரத்தை பராமரித்தல் மற்றும் மேம்படுத்த 31 கால்நடை இனப்பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி (CBFD) அலகுகளுக்கு 13.19 கோடி ரூபாய் செலவில் தேவையான கட்டுமானப் பணிகள் மற்றும் உபகரணங்கள் (48 லிட்டர் உறை விந்து கொள்கலன்கள், 55 லிட்டர் திறன் கொண்ட திரவ நைட்ரஜன் கொள்கலன்கள், 320 லிட்டர் திறன் கொண்ட உறை விந்து கொள்கலன்கள்) வழங்கப்படும்.
10. மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் பேரிடர் காலங்களில் வானிலை செய்திகளை அறிந்திடவும், ஆபத்து காலங்களில் அருகிலுள்ள மீன்பிடி படகுகளிலுள்ள மீனவர்கள் அல்லது கரையில் உள்ளவர்களை தொடர்புகொண்டு, பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு, ஆழ்கடல் படகுகளுக்கு, தொலைபேசிகள் மீன்பிடிப்பில் ஈடுபடும் 200 செயற்கைக்கோள் வாங்கிட ரூபாய் மானியமாக 80 இலட்சம் வழங்கப்படும்..
11. கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் 11 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீன் இறங்குதளத்தின் நுழைவாயிலில் படியும் மணல் திட்டுகளை தடுத்திட ஏதுவாக நிலைப்படுத்தும் சுவர் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் மொத்தம் 11 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் வாயிலாக புதுக்குப்பம். மீனவ கிராமத்தில் 2नांबा 2500 மீனவ குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
12. மீன்கள் மற்றும் மீன் உணவுப் பொருட்களின் இருப்பு விவரம், விலை, மற்றும் சந்தை நிலவரம் ஆகிய தகவல்களை பயனீட்டாளர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக “இ-மீன்” வலைதள சேவை 50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு உரிய மற்றும் நிலையான விலை கிடைப்பதற்கும்.
சந்தைப்படுத்துதலை பரவலாக்குவதற்கும் ஏதுவாக மீன்கள் மற்றும் மீன் உணவுப் பொருட்களின் கிடைக்கும் அளவு. இருப்பு விவரம். விலை, சந்தை நிலவரம் ஆகியவற்றின் தகவல்களை அனைத்து பயனீட்டாளர்களும் வெளிப்படையாக அறிந்து கொள்ள 50 இலட்சம் ரூபாய் செலவில் “இ-மீன்” வலைதள சேவை உருவாக்கப்படும்.
இச்சேவை, விற்பனையாளர்கள் இணைக்கும் மீனவர்கள். மற்றும் நுகர்வோரை பாலமாக அமைந்து. அனைவருக்கும் பயனுள்ளதாக விளங்கும்.
13. மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தில் 4 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். மயிலாடுதுறை பெருமாள்பேட்டை மாவட்டம் கிராமத்தில் மீனவ 150-க்கும் மேலான படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இம்மீனவ கிராம மக்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சந்தைப்படுத்தவும், வலைகளை சரிசெய்திடவும் ஏதுவாக மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் மற்றும் அணுகு சாலை போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
14. தீவிர மீன் வளர்ப்பு முறையில் நீர்த்தேக்கங்களில் மிதவைக் கூண்டுகள் அமைத்து மீன் உற்பத்தியை அதிகரித்திடும் திட்டம் 7 கோடியே 70 இலட்சம் ரூபாய் செயல்படுத்தப்படும் செலவில் செயல்படுத்தப்படும்.
நீர்த்தேக்கங்களில் மீன் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்.மாநிலத்தின் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 7 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 10 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் மிதவைக் கூண்டுகள் அமைத்து மரபுவழி மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்படும்.
இதன் வாயிலாக ஆண்டுக்கு 200 டன் மீன்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் உள்நாட்டு மீனவர்கள், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள். மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
15. திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கும் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை பெற்றிடவும், விரைவில் சந்தைப்படுத்தவும் ஏதுவாக மீன் ஏலக்கூடம், வலைப்பின்னும் கூடம் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் பெருமணல் மீனவ கிராமத்தில் உள்ள 1700 மீனவ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மீனவ மகளிர் பயன்பெறுவர்.
16. அலங்கார மீன் சந்தைப்படுத்துதலை உற்பத்தி மற்றும் மேம்படுத்திட அலங்கார மீன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பலதரப்பட்ட மக்கள் அலங்கார மீன் உற்பத்தி, வளர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து அலங்கார மீன் வளர்ப்பு தொழிலினை இலாபகரமாக மேற்கொள்ளும் வகையில் நிதி ஆதாரங்கள் வழங்கி சந்தைப்படுத்துதலை மேம்படுத்திட அலங்கார மீன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.இதன் வாயிலாக ஊரக மற்றும் நகர் பகுதிகளில் குறிப்பாக மகளிருக்கு வேலை வாய்ப்புகள் பெருகுவதோடு, அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்
17. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மீன்வள கண்காட்சிகள் 74 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். தமிழ்நாட்டின் கிராம பொருளாதாரத்தில் மீன்வளம் முக்கிய மீன்பிடித்தல், மீன்வளர்ப்பு, பங்காற்றுகிறது. அலங்கார மீன் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டிய மீன் உணவு உற்பத்தியில் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் ஈடுபட்டுள்ளனர். மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பினை பிரபலப்படுத்திடவும், மீன் உணவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் அனைத்து 74 ஏதுவாக தமிழ்நாட்டின் மாவட்டங்களிலும் இலட்சம் ரூபாய் செலவில் வர்த்தக கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியுடன் இணைந்து மீன்வள கண்காட்சிகள் நடத்தப்படும்.
18. சாத்தனூர், மஞ்சளாறு, வைகை அணை, அகரம் உள்ளிட்ட அனைத்து அரசு மீன் விதைப்பண்ணைகள் 6 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர், தேனி மாவட்டம், மஞ்சளாறு, வைகை அணை மற்றும் கடலூர் மாவட்டம், அகரம் மீன் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து அரசு மீன் விதை பண்ணைகளில், மீன் விரலிகள் உற்பத்தி திறனை அதிகரித்திட ஏதுவாக, சினைமீகுளங்கள் மற்றும் மீன் வளர்ப்பு குளங்களை புனரமைத்தல், வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் 6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மீன்பண்ணைகளில் வாயிலாக மீன் அரசு விரலிகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மீன் வளர்ப்போருக்கு விநியோகிக்கப்படும்.
19. நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் மீன்பிடிப்பினை மாற்று முறை ஊக்குவித்திட 200 நாட்டுப்படகு மீனவர்களுக்கு கணவாய் மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட 40 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
நாகப்பட்டினம், தூத்துக்குடி. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர மீனவர்களிடையே
மீன்பிடிப்பினை மாவட்டங்களில் மாற்று முறை ஊக்குவிப்பதற்காக, கணவாய் மீன்கள் பிடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கிட 40 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்
இத்திட்டத்தின் வாயிலாக, நாட்டுப்படகு மீனவர்கள் ஏற்றுமதித் தரம் வாய்ந்த கணவாய் மீன்களை பிடித்து, இதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டிட இயலும்.
20. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் 18 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் சுமார் 1300 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பருவநிலை மாற்றம் மற்று கடல் அலைகளின் சீற்றத்தால் மிகுந்த கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்திடவும் பாதுகாப்பாக இக்கிராமத்தை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்திடும் வகையில் கடலரிப்பு தடுப்பு பணிகள் 18 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
21. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் கிராமங்களில்)மீன் இறங்குதளங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய மீனவ கிராமங்களில் 600 படகுகள் மீன்பிடித் தொழிலில் வருகின்றன. கோட்டைப்பட்டினம் மீன்பிடிப் ஈடுபட்டு மீன் இறங்குதளத்தில் பழைய படகணையும் தளம் சேதமடைந்துள்ளது. எனவே. இங்கு படகணையும் தளம் புனரமைப்பு மற்றும் புதிய மீன் ஏலக்கூடம் ரூபாய் 5 கோடி செலவில் அமைக்கப்படும்.
மேலும். ஜெகதாப்பட்டினம் மீன் இறங்குதளத்தில் அதிகரித்து வரும் படகு போக்குவரத்தை கையாளும் வகையில், படகணையும் தளத்தை நீட்டித்து, கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
22. மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மீன் வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும். மீன் வளர்ப்போரின் அதிகரித்திடவும். வருமானத்தை நிலையான மீன்வளர்ப்பினை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமைகள் வாயிலாக 1,000 ஹெக்டேர் பரப்பளவில் மீன்வளர்ப்பு மேற்கொள்ள உள்ளீட்டு மானியமாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் உள்ளீட்டு செலவினம் மீன்வளர்ப்போரின் குறைவதோடு கூடுதல் வருவாய் ஈட்ட இயலும். மேலும் அனைத்து மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமைகள் சீரமைக்கப்படும்.
23. மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர். மீன்வளத்தில் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 50 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். மீன் வளர்ப்போர் மற்றும் மீனவர்கள் பயனடையும் வகையில், பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்ப முறைகளை அறிந்து கொள்ளவும் பல்வேறு மீன்வள ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் கண்டறியப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக 50 இலட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் 500 மீன்வளர்ப்போர் மற்றும் மீனவர்கள்பயன்பெறுவர்.
24. மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில், நவீன தொழில்நுட்பங்களை கொள்ளும் அறிந்து நோக்கில், துறை அலுவலர்களுக்கு 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். நவீன முறை மீன்வளர்ப்பு மற்றும் மீன் உற்பத்தியை அதிகரித்து வேலை வாய்ப்பு மற்றும் மீனவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்திடும் பொருட்டு, மீன் வளர்ப்பு மற்றும் இதர மீன்வளப் பிரிவுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலும், அரசு மீன் பண்ணைகளில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் 100 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களுக்கு மத்திய மீன்வள ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு மாநிலங்களில் 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்..
25. தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை மற்றும் அண்ணா காலனி மீனவ கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சாத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை மற்றும் அண்ணா காலனி ஆகிய மீன் இறங்குதளங்களில் அதிகரித்து வரும் மீன் உற்பத்தியை கையாண்டிட மீன் ஏலக்கூடம். வலைப்பின்னும் கூடம், படகணையும் தளம் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இறங்குதளங்கள் மீன் மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக ஆலந்தலை மற்றும் அண்ணா காலனி ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 6,500 மீனவ குடும்ப உறுப்பினர்கள் பயனடைவர்.
26. தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் டீசல் விநியோக நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, “நிகழ்நேர மேலாண்மை அமைப்பு” 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும். புதுக்கோட்டை, கடலூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் டீசல் விற்பனை நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் எண்ணெய் நிறுவனங்களின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். மேலும், 33 நிலையங்களின் கண்காணித்து. மேலாண்மை டீசல் விநியோக செயல்பாட்டினை முறைப்படுத்தி, மற்றும் நிதி பணப் பரிவர்த்தனைகளை திறம்பட மேற்கொள்ள “நிகழ்நேர மேலாண்மை அமைப்பு” (REALTIME MANAGEMENT 50 இலட்சம் SYSTEM) ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
27. மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக வளாகத்தில் டீசல் வழங்கிட ஏதுவாக தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வாயிலாக மூன்று டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை மாவட்டம்-திருவொற்றியூர் குப்பம், கன்னியாகுமரி மாவட்டம்-இரயுமன்துறை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம்- தரங்கம்பாடி இடங்களில் மீன்பிடி ஆகிய மூன்று தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் புதியதாக மூன்று டீசல் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வாயிலாக அமைக்கப்படும்.
28. அரசு மற்றும் பண்ணைகளுக்கு தீவனத்தை தனியார் மீன் STLDITOUT மீன் விநியோகிப்பதற்காக மீன் தீவன உற்பத்தி ஆலை தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக 60 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
அரசு மற்றும் பண்ணைகளுக்கான தனியார் மீன் மீன் தீவனத் தேவையினை பூர்த்தி செய்திடவும். தரமான மீன் தீவனத்தினை சரியான விலையில் விநியோகிப்பதற்காகவும் புதியதாக மீன் தீவன உற்பத்தி ஆலை தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக அமைக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் வருவாய் அதிகரித்து, உள்நாட்டு மீன்வளர்ப்போருக்கு தரமான மீன் தீவனம் நியாயமான விலையில் வழங்கப்படும்.
29.சென்னை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் “மீன் கழிவு மறுசுழற்சி ஆலைகள்” 45 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக நிறுவப்படும்.
மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் சந்தைகளில் உருவாகும் மீன் கழிவுகளை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும். மீன் தீவனத்திற்கு தேவையான மூலப் பொருட்கள், வேளாண் பயன்பாட்டிற்கு தேவையான உரங்கள் மற்றும் மீன் அமிலம் உற்பத்தி செய்திட ஏதுவாக சென்னை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் “மீன் கழிவு மறுசுழற்சி ஆலைகள்” 45 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக நிறுவப்படும்.
30. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் அனைத்து செயல்பாடுகளிலும் மின்னனு பணப் பரிவர்த்தனை வசதி 25 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். மீனவர்களிடையே எளிய – மின்னனு பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து நடைமுறைப்படுத்தும் விதமாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் அனைத்து செயல்பாடுகளிலும் பரிவர்த்தனைக்கு மின்னனு பணப் தேவையான விற்பனைப்புள்ளி இயந்திரங்கள் (POS Machine), விரைவு மறுபதில் குறியீடு படிப்பான் (QR code reader), வரிக்குறி படிப்பான் (Bar code reader) மற்றும் இதர கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு இணையதள பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னனு வசதி 25 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
31.சிறு, குறு, மீன் விற்பனையாளர்களுக்கான தொழில் முதலீட்டு உதவிகளை வழங்கி வணிக செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக, மீன் விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்
மீன் விற்பனை தொழிலில் ஈடுபடும் சிறு, குறு மீன் விற்பனையாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருந்து வருவதால் அவர்களுக்கு உரிய பொருளாதார மற்றும் திட்ட உதவிகள் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைந்திட அவர்களுக்குத் தேவையான தொழில் முதலீட்டு உதவிகள். வாகனங்கள் மற்றும் வணிகத் தொடர்புகளை செவ்வனே வழங்கிட மீன் விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கங்கள்” உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக வணிக செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும்
32.மாநிலத்தின் மீன் உற்பத்திக்கு வலுசேர்க்கும் தமிழ்நாட்டிற்கென ஒரு வகையில், மீன் வகையினை மாநில மீனாக அடையாளம் கண்டு, அதன் உற்பத்தி மற்றும் மேம்பாட்டிற்கான திட்டம் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் மாநில மரம், மலர்,விலங்கு, பறவை என அறிவிக்கை செய்யப்பட்டு, அவற்றை பாதுகாக்க மாநில தொடர் நடவடிக்கைகள் வருகின்றன. அரசால் மேற்கொள்ளப்பட்டு அவ்வகையில் மக்கள் விரும்புகின்ற உணவாகவும், புரதச்சத்தினை ஈடு செய்யும் உணவு வகைகளில் ஒன்றாகவும் விளங்கும். மீன் உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையிலும். தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் மீன் வகைகளில் ஒரு மீன் வகையினை மாநில மீனாக அடையாளம் கண்டு. அதன் உற்பத்தி மற்றும் 50 மேம்பாட்டிற்கான திட்டம் இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
33. புதிய மீன் இனங்களை மீன் வளர்ப்போரிடையே அறிமுகப்படுத்தி உற்பத்தியை பெருக்கும் விதமாக பாகு மீன் மற்றும் கொடுவா மீன் குஞ்சு உற்பத்தி மையங்கள் முறையே கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். பாகு மீன் (ஏரி வாவல்) மற்றும் கொடுவா இரக மீன்கள் வேகமாக வளரும் மீன் வகைகளாகும். இவற்றின் சந்தை தேவை மற்றும் நுகர்வோர் விருப்பம் அதிகமாக இருப்பதால். மீனவ விவசாயிகளின் வருமானம் மற்றும் மீன் உற்பத்தியை பெருக்குவதற்காக, இம்மீன்களின் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன் க கருதப்படுகின்றது.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மீன் உற்பத்தியினை அதிகரித்திட மீனவ விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் பாகுமீன் மற்றும் கொடுவா மீன் குஞ்சு உற்பத்தி மையங்கள் முறையே கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்படும்.
34. சென்னை, மாதவரம், மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் தங்கி பயிலுவதற்கு ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி உட்கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளில் புதிய விடுதி கட்டடம் ஏற்படுத்தும் வகையில், சென்னை, மாதவரம். மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மீன்பதன தொழில்நுட்பம் சார் தொழிற்கல்வி நிலைய வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதிகள் கட்டப்படும். இவ்விடுதிகளில் உணவு தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ மாணவியர் தங்கி பயனடைவார்கள்.
35. தமிழ்நாடு மீன்வள தொழில்முனைவோர் மாணவர்கள், பயன்பெறும் வகையில் தேசிய அளவிலான மீன்வள புத்தாக்கம் மற்றும் புத்தொழில் மாநாடு தொழில் துறை வல்லுநர்களின் பங்கேற்போடு 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும்.”இந்திய மீன்வள மாணவர்களின் புத்தாக்கம் மற்றும் புத்தொழில் மாநாடு” 1000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும். இம்மாநாடு. மீன்வள அறிவியல் மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கும் மற்றும் தேசிய அளவில் மீன்வளம் பயிலும் மாணவர்களின் நவீன சிந்தனை மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவும். மீனவப் பெருமக்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் இப்புதிய சிந்தனைகள், தொழில் துறை வல்லுநர்களின் பங்கேற்போடு நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்.
36. மீன்வளம் சார்ந்த அனைத்து தொழில் முனைவோருக்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வழிகாட்டிட எதுவாக “மீன்வள தொழில்நுட்ப ஆலோசனை, மேம்பாடு மற்றும் மேலாண்மைக் அமைக்கப்படும் குழு”. மீன்வளர்ப்பு. மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில்களில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு மீன்வளத்தை சந்தைப்படுத்துவதில் முன்னேற்றம் காணவும், மீன் உற்பத்திக்குத் தேவையான தொழில் நுட்பங்களை ஒருங்கிணைக்கவும். தொழில் முனைவோருக்கு, தேவையான அரசு மானியத்துடன் கூடிய மூலதனம் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உகந்த ஆலோசனைகள் வழங்கவும் *மீன்வள தொழில்நுட்ப ஆலோசனை. மேம்பாடு மற்றும் மேலாண்மைக் அமைக்கப்படும். குழு” மேலும், மீன்வள மேம்பாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கிட ஏதுவாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் துறை வல்லுநர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்படும்.
37. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கடலோர மீனவ கிராமங்களில், உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள விரிவான தொழில்நுட்ப சாத்தியகூறுகளை ஆய்வு செய்திட ஏதுவாக 5 கோடி ரூபாய் “சுழல் நிதி” உருவாக்கப்படும். காலநிலை மாற்றம் மற்றும் கடலலைகளின் சீற்றத்தின் காரணத்தால். தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் அடையார் ஆறு முதல் முட்டுகாடு கழிமுகம் வரை. செங்கல்பட்டு மாவட்டம் தேவனேரிகுப்பம் மற்றும் மாமல்லபுரம். விழுப்புரம் மாவட்டம்- நடுக்குப்பம். கடலூர் மாவட்டம் மயிலாடுதுறை சாவடிக்குப்டம். தேவனாம்பட்டினம். மாவட்டம் – கீழமூவர்கரை. நாயக்கர்குப்பம். மடத்துக்குப்பம், திருமுல்லைவாசல் மற்றும் மடவாமேடு, நாகப்பட்டினம் மாவட்டம் -நாகூர் மற்றும் புஷ்பவனம், இராமநாதபுரம் மாவட்டம்- மேற்குவாடி மற்றும் கீழமுந்தல், திருநெல்வேலி மாவட்டம்- கூட்டப்பனை, கூத்தன்குழி மற்றும் மேல இடிந்தகரை, கன்னியாகுமரி மாவட்டம்- அழிக்கால், இனையம்புத்தன்துறை, மண்டைக்காடு புதூர், இனையம் சின்னத்துறை. ஏழுதேசம் சின்னத்துறை மற்றும் கொட்டில்பாடு ஆகிய மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள விரிவான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்திட 5 கோடி ரூபாய் சுழல் நிதி (Revolving Fund) உருவாக்கப்படும்.
The post தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் மூலம் “அலைகள்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.