தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு

2 hours ago 3

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்டதொரு தொகையை சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது.

அவ்வாறே 2024-ஆம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகை (Performance Incentive) அரசு போக்குவரத்து கழகங்கங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

151முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195-ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.85 ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள் சாதனை ஊக்கத்தொகை பெற இயலாது. போக்குவரத்து கழகத்தில் ஆங்கில ஆண்டின் கடைசி நாளன்று ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article