தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

3 months ago 15

குளித்தலை, அக். 24: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற தலைவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி தமிழ் துறையில் இருந்து பிஏ தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி அனு பெரியார் குறித்த பேச்சுப் போட்டியில் முதல் பரிசும், தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி வினிதா டாக்டர் அம்பேத்கர் குறித்த பேச்சு போட்டியில் முதல் பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற மாணவிகளை பாராட்டும் வகையில் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பொறுப்பு அன்பரசு தமிழ் துறை மாணவிகளான அனு,வினிதா ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். உடன் தமிழ் துறை தலைவர் முனைவர் ஜெகதீசன், முனைவர் முருகானந்தம் மற்றும் தமிழ் துறை பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article