சென்னை: தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார். அவதூறுகள், வதந்திகள், பொய்களை மட்டுமே நம்பி கட்சி நடத்துபவர்களாக இருக்கிறார்கள். வன்முறையைத் தூண்டிவிடும் சமூக விரோத மதவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அமைதியைக் குலைக்கும் எவராக இருந்தாலும் மக்களால் அந்நியப்படுத்தப்படுவார்கள். வடநாட்டில் நிலவுவது போன்று, மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்கப் பார்க்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
The post தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.