சென்னை: தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகமானது. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன எனவும் பேசியுள்ளார்.
The post தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.