பணி: Medical Assistant (Airmen Intake-2025).
சம்பளம்: ரூ.26,900.
வயது: 03.07.2004க்கும் 03.07. 2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 2 வருட தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டி.பார்ம் அல்லது பி.பார்ம் படித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்த பட்சம் 152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலமும், 5 செ.மீ., விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் உடற்திறன் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
உடற்திறன் தேர்வில் ஆண்கள் 1.6 கி.மீட்டர் தூரத்தை 7 நிமிடங்கள் ஓடி முடித்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்அப், சிட்அப் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளை செய்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடைபெறும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி ஆட்சேர்ப்பு 29.01.2025 முதல் 06.02.2025 வரை நடைபெறும்.
இடம்: Maharaja College Ground, P.T.Usha Road,
Ernakulam, COCHIN, Kerela- 682 011.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் 30.05.2025 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.
www.airmenselection.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் நேரடி
ஆள்சேர்ப்பில் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.01.2025.
The post விமானப் படையில் ஏர்மேன் பணி – பிளஸ் 2 டிப்ளமோ தகுதி appeared first on Dinakaran.