சென்னை: தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக வணிகர் சங்கத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொழிலாளர் துறை ஆணையர் சி.அ.ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக தொழிலாளர் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.