சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. முல்லைப் பெரியாற் று பாசனத்தில் சுமார் 4000 ஏக்கர் அளவில் வருடத்தில் இருபோகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் பி.டி ராஜன் கால்வாய் பாசனத்தையும் சேர்த்து ஆங்காங்கு உள்ள கண்மாய்கள், குளங்களில் தேக்கி தண்ணீர் தேக்கி வைக்கிற போது 8 மாதம் வரை தேங்கி நீடிக்கிறது, இதில் தேங்கும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த நிலையில், ஆழ்குழாய் மற்றும் கிணற்றுப் பாசனம் வாயிலாக பிற பயிர்களான வாழை, தென்னை திராட்சை, பல ரக பூக்கள் ,கா ய்கறிகள், தக்காளி, செங்கரும்பு, ஆ லை கரும்பு, சோளம், மக்காச் சோளம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், அழகாபுரி பகுதிகளில் தற்போது அதிகளவில் கொத்தமல்லி பயிரிடப்பட்டது. போதுமான தண்ணீர் கிடைத்ததால் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. கொத்தமல்லி உணவு தயாரிப்பு மற்றும் மருந்துப் பொருளாக இருப்பதால் சந்தையில் கிராக்கி உள்ளது. நெல் இருபோக சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகளுக்கு கொத்தமல்லி சாகுபடி கைகொடுத்துள்ளது. 70 நாட்களில் அறுவடை செய்யப்படும் கொத்தமல்லியை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்லத் துவங்கியுள்ளனர்.
The post சின்னமனூர் பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.