தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா

1 week ago 2

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருக்கிறார். இந்த நிலையில் கிண்டி நட்சத்திர ஓட்டலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு அமித்ஷா சென்றார்.

தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு மத்திய மந்திரி அமித்ஷா ஆறுதல் கூறினார். அமித்ஷாவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோரும் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

Read Entire Article