தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி: தீயணைப்புத் துறை தகவல்

2 weeks ago 6

சென்னை: தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் இரவில் பலவண்ண மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் சிறிய பட்டாசு விபத்துக்களால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டறைக்கு பொதுமக்களிடம் இருந்து128 அழைப்புகள் வந்த நிலையில், பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்தது தொடர்பாக 97 அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. பட்டாசுகள் இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்து நிகழ்ந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

The post தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி: தீயணைப்புத் துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article